You are currently viewing 6 மாத குழந்தைக்கு கொடுக்கக் கூடாத உணவுகள் | Baby Foods to Avoid at 6 Months in Tamil

6 மாத குழந்தைக்கு கொடுக்கக் கூடாத உணவுகள் | Baby Foods to Avoid at 6 Months in Tamil

  • Post author:
  • Reading time:2 mins read
  • Post last modified:March 22, 2026

6 மாதம் வந்தவுடன் குழந்தைக்கு திட உணவு (Solid Foods) ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த வயதில் எல்லா உணவுகளும் பாதுகாப்பானது இல்லை. சில உணவுகள் குழந்தையின் செரிமானத்திற்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பு தரலாம்.

அதனால், 6 மாத குழந்தைக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

6 மாத குழந்தைக்கு கொடுக்கக் கூடாத உணவுகள் பட்டியல் | Foods to avoid for 6 month baby

1. உப்பு அதிகமான உணவுகள்

6 மாத குழந்தையின் சிறுநீரகம் (Kidney) இன்னும் முழுமையாக வளரவில்லை. உப்பு சேர்த்த உணவு கொடுத்தால் kidney பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • உப்பு சேர்த்த கஞ்சி
  • உப்பு கலந்த சூப்

2. சர்க்கரை சேர்க்கப்பட்ட foods

சர்க்கரை குழந்தையின் பற்கள், உடல் எடை, மற்றும் ஜீரண சக்தி மீது மோசமான பாதிப்பு உண்டாக்கும்.

  • சர்க்கரை சேர்த்த பால்
  • இனிப்புகள்
  • ஜவ்வரிசி சர்க்கரை கலந்து

3. தேன் (Honey) – ஏன் கொடுக்கக் கூடாது?

1 வயது வரை தேன் கொடுக்கக் கூடாது. Botulism என்ற பாதுகாப்பற்ற பாக்டீரியா தொற்று வர வாய்ப்பு உண்டு.

  • தேன் கலந்த பால்
  • தேன் கலந்த கஞ்சி

4. பசும்பால் (Cow’s Milk)

6 மாத குழந்தைக்கு பசும்பால் நேரடியாக கொடுக்கக் கூடாது.

  • ஜீரணம் ஆகாது
  • அலர்ஜி மற்றும் குடல் பிரச்சனை வரலாம்

(1 வயதுக்கு பிறகு மட்டுமே தொடங்கவும்)

5. வறுத்த / காரமான உணவுகள்

  • பொரியல்
  • வடை
  • பஜ்ஜி
  • கார சட்னி

வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்.

6. முழு nuts மற்றும் கடின உணவுகள்

  • முழு கடலை
  • முந்திரி
  • பாதாம்
  • முழு பருப்பு

மூச்சுத் திணறல் (Choking Risk) ஏற்படும். (பவுடர் வடிவில், மருத்துவர் ஆலோசனையுடன் கொடுக்கலாம்)

7. பாக்கெட் & ப்ராசஸ்ட் உணவுகள்/foods

  • Biscuit
  • Cerelac (அதிக சர்க்கரை உள்ளவை)
  • Ready-made baby food

Preservatives & sugar அதிகம்.

8. ஜங்க் உணவுகள்

  • சிப்ஸ்
  • சாக்லேட்
  • கேக்
  • ஐஸ்கிரீம்

6 மாத குழந்தைக்கு பாதுகாப்பான உணவுகள்

✔ சாதம் கஞ்சி
✔ ராகி கஞ்சி
✔ ஆப்பிள் ப்யூரி
✔ வாழைப்பழ ப்யூரி
✔ காரட், பூசணிக்காய் வேகவைத்து மசித்தது

முக்கிய குறிப்புகள்

  • உப்பு + சர்க்கரை இல்லாமல் உணவு தயார் செய்யவும்
  • புதிய உணவு ஒன்றை 3 நாட்கள் தொடர்ந்து கொடுத்து அலர்ஜி இருக்கிறதா கவனிக்கவும்
  • தண்ணீர் கொடுக்க ஆரம்பிக்கலாம் (சிறிதளவு)
Related Articles:

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

6 மாத குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கலாமா?

வேண்டாம். சர்க்கரை, preservative அதிகம்.

6 மாத குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா?

1 வயதுக்கு பிறகு தான்.

இந்த தகவல்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. Share பண்ணுங்க – மற்ற அம்மாக்களுக்கும் உதவும்.

This Post Has One Comment

Leave a Reply